சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணை ஊழியர் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு பால் பாக்கெட்டுகளை ஏற்றும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மாதவரம் ஆவின் பால் பண்ணையில் இருந்து சென்னைக்கு நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 38 ஆயிரம் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்யப்படுகின்றன. இங்கு 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பால் பாக்கெட்டுகளை ஏற்றும் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், அங்கு புரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, பால் பாக்கெட்டுகளை ஏற்றும் பணிக்காக வந்த ஊழியர்கள், கொரோனா பாதிப்பு குறித்து தகவல் தெரிந்ததால், திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
நாள் ஒன்றுக்கு 34 லாரிகளில் பால் பாக்கெட்டுகள் ஏற்றி செல்லப்படும் நிலையில், ஊழியர்கள் குறைவாக வந்ததால், காலையில் செல்ல வேண்டிய லாரிகளில் 14 மட்டுமே வெளியில் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சில தொழிலாளர்கள் பணிக்கு திரும்பி விட்டதாகவும், பால் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சேலம், காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர் மாவட்டங்களில் இருந்து பால் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Loading More post
'சீனா கட்டும் பாலத்தை பார்க்க ட்ரோன்களை அனுப்புங்கள்'- பிரதமர் மோடிக்கு ஓவைசி பதில்
”அரசுப் பள்ளிகளில் எப்போது தொடங்குகிறது மாணவர் சேர்க்கை?”- பள்ளிக்கல்வித்துறை பதில்
கல்வித் தொலைக்காட்சியில் சிஇஓ பதவி: தகுதியும் ஆர்வமும் இருப்போர் விண்ணப்பிக்கலாம்!
'கெத்துக்காக' ரயிலின் மேற்கூரையில் ஏறிய இளைஞனுக்கு நிகழ்ந்த சோகம்... அதிர்ச்சி வீடியோ!
‘குழந்தைகளின் அலறல் கேட்டும் தாமதித்த போலீஸ்’- அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் புது புகார்
பட்லரின் சதம் மட்டுமல்ல; பௌலர்கள் வியூகமும்தான் ராஜஸ்தானை வெல்ல வைத்தது!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?