[X] Close

சிங்கத்துடன் காரில் ரவுண்ட்: தொழிலதிபர் கைது!

Business-man-arrested-for-travelling-with-lion-in-car

திறந்தவெளி காரில் சிங்கத்தை ஏற்றி, மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் சென்ற தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.


Advertisement

பாகிஸ்தான் கராச்சி நகரைச் சேர்ந்தவர் சக்லைன் ஜாவித். தொழிலதிபரான இவர், மிருகக் காட்சி சாலை நடத்தி வருகிறார். இங்குள்ள சிங்கம் ஒன்றை தனது காரின் பின் பகுதியில் அமர வைத்து, கராச்சி நகரில் உலா வந்தார். காரில் சிங்கத்தைப் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடினர். சாலையில் ஆட்டோ, டூவிலர், கார்கள் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்கள் பீதியடைந்தனர். சிங்கம் பாய்ந்து வந்துவிடுமோ என்கிற பயத்திலேயே சாலையில் பயணித்தனர். இந்தச் சம்பவத்தை சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இது பரபரப்பானது. இதையடுத்து ஜாவித் கைது செய்யப்பட்டார். 
இதுபற்றி போலீஸ் எஸ்.பி ஹைதர் கூறும்போது, ’மிருகக் காட்சி சாலை நடத்திவரும் ஜாவித், சிங்கத்தை இப்படிக் கொண்டு சென்றது ஏற்க முடியாதது. இதனால் கைது செய்தோம்’ என்றனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலைச் செய்யப்பட்டார்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close