இனி சுட்டெரிக்கும் வெயில் தான்... இன்று முதல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்!

இனி சுட்டெரிக்கும் வெயில் தான்... இன்று முதல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்!
இனி சுட்டெரிக்கும் வெயில் தான்... இன்று முதல் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம்!

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் தமிழகத்தில் இன்று தொடங்கியது. இன்று தொடங்கிய கத்தரி வெயில் 28 ஆம் தேதி நிறைவடைகிறது.

இது குறித்து தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், ''வெப்பநிலை பொதுவாக மே மாதத்தில் சற்றே அதிகரித்து காணப்படும். அந்நிலை இந்த ஆண்டும் தொடரும். அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அங்கேயே நீடிக்கிறது. புயலாக மாற வாய்ப்பு குறைவு. எனவே கடலிலேயே அது வலுவிழக்கும்.

இதனால் தமிழகத்தில் வெப்பச் சலன மழைக்கு வாய்ப்பு உண்டு. மே 12 ஆம் தேதி வாக்கில் வங்கக் கடலில் ஒரு தாழ்வு பகுதி உருவாகும். இதனால் தமிழகத்தில் மழை உள்ளதா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இன்று தொடங்கும் கத்தரி வெயில் வரும் 28 ஆம் தேதி வரை நீடிக்கும்'' என தெரிவித்துள்ளது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com