[X] Close

கொரோனா சிகிச்சைக்காகச் சென்னையிலுள்ள திருமண மண்டபங்களை ஒப்படைக்க நோட்டீஸ்

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Notices-have-been-sent-to-the-owners-to-hand-over-the-wedding-halls
திருமண மண்டபங்களை ஒப்படைக்க வேண்டி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 
 
கொரோனா சிகிச்சைக்காகச் சென்னையில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களையும் ஒதுக்கித் தருமாறு உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது தொடர்பாகத் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் அனுப்பியுள்ள கடிதத்தில் கொரேனாவால் ஏற்பட்டுள்ள அவசர சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 
image
 
கொரோனா சிகிச்சைக்கான தேவை இருப்பதால் திருமண மண்டபங்களை உடனடியாக உடைமைகளை காலி செய்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை ஆணையர் பிரகாஷ்,  சென்னையிலுள்ள அனைத்து மண்டபங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார். மேலும் சென்னையில் மட்டும் 747 மண்டபங்கள் உள்ளதாகக் கூறிய அவர், இது ஒரு தேசிய பேரிடர் காலம் என்பதால் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
image
 
ஏற்கனவே சென்னையில் உள்ள அனைத்து பள்ளி-கல்லூரிகளையும் ஒதுக்கித் தருமாறு மாநகராட்சி நிர்வாகம் கேட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Advertisement

Advertisement
[X] Close