Published : 18,Jan 2017 02:13 AM

முதலமைச்சர் இளைஞர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: மு.க. ஸ்டாலின்

The-Chief-Minister-will-hold-talks-with-youths--MK-Stalin

மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களை முதலமைச்சர் சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

ஜல்லிக்கட்டு கோரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தி வரும் மெரினா கடற்கரை பகுதியில், மின் விளக்குகள் அணைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் காப்பாற்றக் கோரி நடைபெறும் போராட்டப் பகுதியில் அ.தி.மு.க. அரசு இப்படி இருட்டடிப்பு செய்திருப்பது வேதனையளிப்பதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார். ஜனநாயக முறையில் நடக்கும் போராட்டங்களை மதித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முயற்சி செய்வதுதான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல் கடமை என்பதை அரசு உணர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உடனடியாக போராடும் இளைஞர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டு பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்