[X] Close

ஜிஎஸ்டியால் திருப்பதி லட்டு விலையும் உயர்கிறது

Due-to-GST-Tirupathi-laddu-s-price-increases

 


ஜி.எஸ்.டி வரி விதிப்பால் திருப்பதி லட்டு விலை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் உயரவுள்ளது. கோவில் பிரசாதங்களின் மூலப்பொருட்கள் விலை மற்றும் அறநிலையத்துறைக்குச் சொந்தமான அறைகளின் வாடகை ஜிஎஸ்டியால் கணிசமாக உயரவுள்ளதால் பக்தர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டின் மூலப்பொருட்கள் விலை மீது 6 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் லட்டு தயார் செய்வதற்கான ‌செலவு கூடுவதால், சலுகை விலையில் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த லட்டின் விலை உயரக்கூடும் எனக் கூறப்படுகிறது. மேலும், திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான அறைகளில், 500 ரூபாய்க்கு மேல் கட்டணம் உள்ள அறைகளுக்கு ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளதால், பக்தர்கள் சொகுசு வரி செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், கோவில்களில் நடத்தப்படும் தலைமுடி ஏலத்திற்கும் ஜி.எஸ்.டி. வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு கொண்டு வரவுள்ள ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் அனைத்து கோயில்களிலும், தரிசன டிக்கெட், மற்றும் பிரசாதங்களின் விலை கணிசமாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close