Published : 02,May 2020 06:18 AM
முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் : தளர்வுகள் வழங்கப்படுமா?

முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில், கொரோனா தொற்று குறைந்த கிராமப்புற பகுதிகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து ஆலோசனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி அளிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும் மக்களுக்கு கூடுதல் நிவாரண உதவி வழங்குவது பற்றியும் முடிவெடுக்க வாய்ப்புகள் உள்ளதாக தெரிகிறது. மத்திய அரசின் பொதுமுடக்க நீட்டிப்பை அமல்படுத்துவது பற்றியும் சென்னையில் கொரோனா பரவலைத் தடுப்பது பற்றியும் விரிவாக ஆய்வு நடத்தவும் வாய்ப்பு உள்ளது.
கேன்சரால் பாதிக்கப்பட்ட தந்தையின் ஆசை: வீட்டிற்குள் முடிந்த மகனின் திருமணம்!
முன்னதாக, மே 4-ஆம் தேதியிலிருந்து பொதுமுடக்கத்தை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.