“எச்சில், வியர்வை கொண்டு பந்தை தேய்க்கக்கூடாது” - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கட்டுப்பாடு

“எச்சில், வியர்வை கொண்டு பந்தை தேய்க்கக்கூடாது” - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கட்டுப்பாடு
“எச்சில், வியர்வை கொண்டு பந்தை தேய்க்கக்கூடாது” - ஆஸ்திரேலிய வீரர்களுக்கு கட்டுப்பாடு

கொரோனா வைரஸுக்கு பின்னர் மேற்கொள்ளப்படும் பயிற்சியில் கிரிக்கெட் வீரர்களுக்கான கட்டுப்பாடுகளை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக அனைத்து விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளும் ரத்தாகியுள்ளன. இருந்தாலும், கொரோனா தாக்கத்தின் குறைவை பொறுத்து கிரிக்கெட் வீரர்களுக்கு பயிற்சியை தொடங்க அந்தந்த நாடுகள் திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா வைரஸ்க்குப் பின்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் மேற்கொள்ளும் பயிற்சிகளை 3 வித நிலைகளில் பட்டியலிட்டு அந்நாட்டு வாரியம் அறிவித்திருக்கிறது. அதன்படி முதல்நிலை, 2ஆம் நிலை மற்றும் 3ஆம் நிலை என கட்டுப்பாட்டுகளுடன் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

முதல்நிலையில் தனிமை பயிற்சியை தவிர அனைத்து வித பயிற்சிகளுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை என்பது இன்னும் சில வாரங்களுப்புப் பின்னர் தொடங்கும் என்றும், அதில் வலைப்பயிற்சி மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பந்துவீச்சாளர் மற்றும் பேட்ஸ்மேன் மட்டுமே அதில் இடம்பெற வேண்டும் எனவும், மற்ற நபர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது எனவும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் பந்தை பவுலர்கள் எச்சில் மற்றும் வியர்வைக் கொண்டு தேய்க்கக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஃபீல்டிங் பயிற்சியை மேற்கொள்ள தடையில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுதவிர மூன்றாம்நிலை பயிற்சி இந்த வருட இறுதியில் தொடங்கப்படலாம் என்றும், அதில் அனைத்து வித பயிற்சிகளும் மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், பந்தை எச்சில் மற்றும் வியர்வைக் கொண்டு தேய்க்கக்கூடாது என்ற கட்டுப்பாடு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com