Published : 01,May 2020 01:05 PM
பொதுமுடக்கம் 2 வாரங்களுக்கு நீட்டிப்பு : மத்திய உள்துறை

நாடு முழுவதும் பொது முடக்கம் மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கம் மே 3ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு அதனை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மே 17ஆம் தேதி வரை பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஆரஞ்சு மற்றும் பச்சை நிற பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.