[X] Close

பணம் எடுக்க முடியாமல் தவித்த மக்கள் - புதிய தலைமுறை செய்தியால் வங்கி செய்த ஏற்பாடு...!

தமிழ்நாடு

People-are-not-able-to-cash-in-ATMs--Bank-made-arrangements

சீர்காழி அருகே கொரோனா தொற்றால் சீல்வைக்கபட்ட பகுதியில் வங்கி மற்றும் ஏ.டி.எம் மையங்கள் முடங்கியதால் பணம் எடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், புதியதலைமுறை செய்தி எதிரொலியால் அங்கு நடமாடும் ஏ.டி.எம் வாகனம் அமைக்கப்பட்டுள்ளது.


Advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பொறையாரில் கடந்ந சில நாட்களுக்கு முன்னர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து பொறையாறு பேருந்து நிலைய சாலை, வட்டாட்சியர் அலுவலக சாலை, காட்டுச்சேரி சாலை உட்பட 10 க்கும் மேற்பட்ட சாலைகள் மூடி சீல்வைக்கப்பட்டுள்ளன. இந்த சீல் வைக்கப்பட்ட பகுதியில்தான் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நான்கு ஏ.டி.எம். மையங்கள் அமைந்துள்ளன.

image


Advertisement

சீல்வைக்கபட்ட பகுதிக்கு வெளியாட்கள் யாரும் செல்லமுடியாது என்பதால் பலரால் அவசர தேவைக்கு பணம் எடுக்கமுடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி பொறையாறு பகுதியில் நடமாடும் ஏ.டி.எம் மையம் அமைக்க வேண்டும் என சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

image

இதுகுறித்து புதியதலைமுறை கடந்த 27-ஆம் தேதி அன்று செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகத்தின் ஏற்பாட்டின் பேரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் நடமாடும் ஏ.டி.எம் வாகனம் தற்போது பொறையாறு பகுதியில் ஒவ்வொரு வீதி வீதியாக வலம் வருகிறது. பணம் தேவைபடும் மக்கள் வீட்டின் வாயிலிலேயே வாகனத்தை நிறுத்தி பணத்தை எடுத்து செல்கின்றனர். கடந்த ஒருவாரமாக பணம் எடுக்க முடியாமல் தவித்த பொறையாறு பகுதி மக்கள் புதியதலைமுறை செய்தி எதிரொலியால் மகிச்சியடைந்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close