[X] Close

தமிழகத்தில் ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா - சென்னையில் 138 பேருக்கு பாதிப்பு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

corona-cases-today-in-tamilnadu

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 161 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமீழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதுதொடர்பான தகவல்களை தமிழக சுகாதாரத்துறை நாள் தோறும் மாலை 7 மணியளவில் அறிவித்து வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மேலும் 161 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2323 ஆக அதிகரித்துள்ளது.

image


Advertisement

இன்றைய நிலவரப்படி சென்னையில் மட்டும் 138 பேர் கொரானாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த 3  நாட்களில் 335 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

image

செங்கல்பட்டு, மதுரையில் தலா 5 பேர், காஞ்சிபுரம், ராமநாதபுரத்தில் தலா 3 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்றைப்போல், இன்றும் பத்து வயதுக்குட்பட்ட எட்டு குழந்தைகளுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close