[X] Close

தமிழகத்தில் ஊரடங்கை படிப்படியாகத்தான் தளர்த்த முடியும்: மருத்துவ நிபுணர் குழு

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

corona-lockdown-status-in-tamilnadu

தமிழகத்தில் ஊரடங்கை முழுமையாக தளர்த்த தற்போது வாய்ப்பு இல்லை என்றும் படிப்படியாகதான் தளர்த்த முடியும் என்றும் மருத்துவ நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

முதல்வருடன் நடைபெற்ற ஆலோசனைக்குப் பின் மருத்துவ நிபுணர் குழுவின் பிரதீப் கவுர், “கொரோனா தொற்று நீண்ட நாட்களாக நம்முடன் இருக்கும் கடந்த வாரத்தில் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு விகிதமும் அதிகரித்துள்ளது” என்றார்.

மேலும், “பரிசோதனை அதிகரித்ததால், கொரோனா தொற்றை அதிக அளவில் கண்டறிய முடிந்தது. தனிமனித இடைவெளி, மாஸ்க் அணிவதை கட்டாயம் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் அதிகம் கூட்டம் கூடுவதை அனுமதிக்கக் கூடாது. புற்றுநோய், சிறுநீரக பாதிப்பு, சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்கள் முறையாக சிகிச்சையை கடைபிடிக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.


Advertisement

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close