
சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே கஸ்தூரிபாய் மருத்துவமனையில் 27 ஆம் தேதி 27 வயது இளம் பெண் பிரசவத்தின்போது உயிரிழந்தார். நேற்று உயிரிழந்த இளம் பெண்ணுக்கு கொரோனா நோய் தொற்று உறுதியானது. இதனையடுத்து இந்தப் பெண்ணுடன் இருந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கர்ப்பிணிகள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதில் ஒருவர் புளியந்தோப்பைச் சேர்ந்தவர். இவர் ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் சேர்கப்பட்டு பின்னர் அங்கிருந்து இந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர். மற்றொருவர், குரோம்பேட்டையைச் சேர்ந்தவர். கேம்சி, ராஜிவ்காந்தி, கஸ்தூரிபா ஆகிய எந்த மருத்துவமனையிலும் சேர்க்கப்படவில்லை. நேராக எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அபாஷனுக்கு மருந்து சாப்பிட்ட நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார்.
சென்னையில் நேற்று மட்டும் 104 பேர் கொரானாவல் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 197 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.