சென்னை அரும்பாக்கத்தில் இறந்த முதியவருக்கு கொரோனா உறுதி..! 

சென்னை அரும்பாக்கத்தில் இறந்த முதியவருக்கு கொரோனா உறுதி..! 
சென்னை அரும்பாக்கத்தில் இறந்த முதியவருக்கு கொரோனா உறுதி..! 
சென்னையில் இறந்து போன முதியவருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
 
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் 69 வயது முதியவருக்குச் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்ததாகவும் மூச்சு விடுவதில் பிரச்சனை ஏற்பட்டதாகவும் கூறி  நேற்று இரவு முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
 
 
இந்நிலையில் இன்று காலை அவர்  இறந்து விட்டார். இறந்து போன முதியவரின் ரத்தத்தைச் சோதனை செய்ததில் இவருக்கு கொரோனா தோற்று உள்ளதாக மருத்துவமனையிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி இறந்தவரின் பிரேதம் தனியார் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
 
மேலும் இறந்தவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணம் தெரியவில்லை. இறந்து போன முதியவருக்குத் திருமணமாகி மகன் உள்ளார். மகனுக்கு திருமணமாகி அவருடைய மனைவியுடன் ஆந்திராவில் கடந்த ஆறு வருடங்களாக வசித்து வருவதாகத் தெரியவருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com