Published : 27,Apr 2020 01:34 PM
சென்னையில் இன்று மட்டும் 47 பேருக்கு கொரோனா...!

சென்னையில் இன்று மட்டும் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. சீனாவில் பரவத்தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது அங்கு கட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மற்ற நாடுகளை வெகுவாக பாதித்து வருகிறது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு நிறுத்தம்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2, 07,094 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,82,552 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.
இந்தியாவில் கோரோனாவால் 27,892 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 872 பேர் உயிரிழந்துள்ளனர். 6,185 பேர் சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர். தமிழகத்தை பொருத்தவரை 1937 பேர் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றுமட்டும் 52 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், சென்னையில் மட்டும் 47 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் மதுரையில் 4 பேருக்கும் விழுப்புரத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.