காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை !

காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை !
காஷ்மீரில் என்கவுன்ட்டர்: 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை !

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினரிடையே கடும் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் தீவிரவாத தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இம்மாதத்தில் மட்டும் பலமுறை தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.

இந்நிலையில் இன்று காலை முதல் ஜம்மு - காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் கட்டர் பகுதியில் தீவிரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் தீவிரவாதிகள் ஊடுருவல் இருப்பதாக ராணுவம், சிஆர்பிஎஃப், காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கினர். அப்போது தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதில் தாக்குதல் நடைபெற்றது.

இதில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டதாக ராணுவம் தகவல் கொடுத்துள்ளது. மேலும், அங்கு தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தாண்டு மட்டும் இதுவரை ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் 54 தீவிரவாதிகளும் 17 பாதுகாப்பு படையினரும் பல்வேறு தாக்குதலில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com