Published : 15,Jun 2017 05:26 AM

தேனி அருகே துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி

Person-shot-dead-near-Theni


தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வருஷநாடு பகுதியில் துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், அதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ‌
வருஷநாடு பகுதியிலுள்ள மகாலிங்கம் பாறை வனப்பகுதியில் 5 பேர் அடங்கிய கும்பல், நாட்டுத் துப்பாக்கி எடுத்துக் கொண்டு வேட்டைக்கு சென்றிருக்கின்றனர். அப்போது, வேட்டையில் எதுவும் கிடைக்காத நிலையில் துப்பாக்கியிலிருந்து குண்டுகளை அகற்றும் போது எதிர்பாராத விதமாக சுட்டதால் சமயணன் என்பவர் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, அந்தக் கும்பலைச் சேர்ந்த 3 பேர் தப்பியோடிய நிலையில் இது குறித்து ஊருக்குள் தகவல் கொடுக்க வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவரை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்