[X] Close

சாலையில் தானே கெடுபிடி: கடல் வழியாக 1000கிமீ பயணம் செய்த தொழிலாளர்கள்!

இந்தியா,கொரோனா வைரஸ்

Coronavirus-lockdown---Sea-escape-from-Chennai-to-odisha

சென்னையில் வசித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், ஊரடங்கின்போது பேருந்து, ரயில்கள் கிடைக்காததால், கடல் மார்க்கமாக 1000 கிலோ மீட்டர் பயணித்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

ஒடிஷா, ஆந்திராவைச் சேர்ந்த தொழிலாளர்கள் சென்னையில் பணியாற்றி வந்துள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், அவர்களில் பலரால் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், 27 புலம்பெயர் தொழிலாளர்கள், காவல்துறை கெடுபிடியில் இருந்து தப்பித்துக் கொள்ள கடல் மார்க்கமாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடிவெடுத்தனர்.

image


Advertisement

இதற்காக சொந்தமாக படகை வாங்க தலா 7 ஆயிரம் ரூபாய் பகிர்ந்து ஒரு லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் சேகரித்தனர். அந்தப் பணத்தில் 3 ஆண்டுகள் பழமையான ஒன்பது எச்.பி திறன் இன்ஜின் கொண்ட படகை வாங்கி ஆயிரம் கிலோ மீட்டர் ,  கடல் வழியாகவே பயணித்தனர்.

 வழக்கமாக கடலோர காவல்படை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இவர்கள் மட்டும் அவர்களிடம் சிக்காமல் ஆந்திரா மற்றும் ஒடிஷாவுக்கு சென்றடைந்தது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இரு மாநில தொழிலாளர்களும் அவரவர் மாநிலங்களில் கரையேறியதும், அவர்களை காவல்துறையினர் தனிமைப்படுத்தி முகாமில் சேர்த்திருக்கின்றனர்.

image


Advertisement

 ஆயிரம் கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும் என்பதற்காக படகில் இரு மூட்டை அரிசி, காய்கறிகள், சமையல் எரிவாயு குடிநீர் ஆகியவற்றையும் எடுத்துச் சென்றுள்ளனர். படகை ஓட்டிச் சென்ற மீனவர் இந்த தகவலை தனது உறவினர் ஒருவரிடம் கூறியுள்ளார். இதன் காரணமாகவே, இந்த விவகாரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கொரோனா பரிசோதனையில் இருந்து தப்பிக்க காரில் எஸ்கேப் ஆன காவலர்..!


Advertisement

Advertisement
[X] Close