
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடக்கும் அரையிறுதியில் இந்தியாவும் பங்களாதேஷ் அணியும் மோதுகின்றன.
இந்தப் போட்டி குறித்து இந்திய கேப்டன் விராத் கோலி கூறும்போது, ‘கிரிக்கெட் போட்டியில் எதுவும் நடக்கலாம். பல அணிகள் தங்களுடன் ஆடிய எதிரணிக்கு அதிர்ச்சி அளித்திருக்கிறது. அதனால், எந்த அணியையும் சாதாரணமாக நாங்கள் நினைக்கவில்லை. பங்களாதேஷ் அணி கிரிக்கெட்டில் முன்னேறி இருக்கிறது. அந்த அணி வீரர்கள் தங்கள் ஆட்டத்தை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்கள். சில போட்டிகளில் அவர்கள் பயங்கரமானவர்களாக இருந்திருக்கிறார்கள். கடினமானச் சூழலில் எப்படி வெல்ல வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
’2015-ல் நடந்த உலகக் கோப்பை போட்டியில் முதன் முறையாக காலிறுதிக்கு வந்த பங்களாதேஷை இந்தியா வெளியேற்றியதற்கு இன்று நடக்கும் போட்டியில் பங்களாதேஷ் பலி வாங்க நினைக்குமா?’ என்று கேட்கிறார்கள். அதற்குப் பிறகு இரண்டு அணிகளும் பலமுறை மோதிவிட்டோம். அதனால் இந்த கேள்வியே தேவையில்லாதது’ என்றார்.