
61 நாட்களாக இருந்த மீன் பிடி தடைகாலம் முடிந்ததையடுத்து நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
45 நாட்களாக இருந்த மீன்பிடி தடைகாலம் இந்த ஆண்டு முதல் 61 நாட்களாக மாற்றப்பட்டது. இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைகாலம் நீங்கியது. இதனால் ஆழ்கடலில் மீன்பிடிக்க செல்வதற்கான ஆயத்த பணிகளில் மீனவர்கள் மும்முரமாக ஈடுபட்டனர்.
ராமேசுவரம் உள்பட தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ள மீனவர்கள் நேற்று பகலிலேயே மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர். பெரும்பாலான பகுதிகளில் நள்ளிரவில் ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இவர்கள், மீன்பிடித்துவிட்டு ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் கரை திரும்புவார்கள். அவர்கள் திரும்பியதும் மீன்களின் விலை குறையும் என தெரிகிறது.