Published : 21,Apr 2020 04:55 PM
3 நாட்கள் வீட்டிற்குள் இருந்த பேராசிரியர் மர்ம மரணம் ? : போலீஸ் விசாரணை

திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பேராசிரியர் மர்ம மரணம் அடைந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கனகராஜ் உதவிப் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். பல்கலைக்கழகத்தின் அருகாமையில் உள்ள பேராசிரியர்கள் குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தார். இதற்கிடையே கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், கனகராஜ் சொந்த ஊர் செல்ல முடியவில்லை. இந்நிலையில் மூன்று நாட்களாக அவர் வீட்டிலிருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது கனகராஜ் சடலமாக நாற்காலியில் அமர்ந்தபடியே இருந்துள்ளார்.
தங்கையிடம் வம்பிழுத்தவரை தட்டிக்கேட்டவர் கொலை..! - இருவர் கைது
இதையடுத்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் காவல்துறையினர் கனகராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.