சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 5 பெண்களிடம் நகைபறிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன. பெண்களிடம் நகைகளை பறித்தபைக் கொள்ளையர்கள் குறித்து போலீஸ் தீவிர விசாரணை நடத்திவருகிறார்கள்.
கண்களில் கவலையும், துயரம் தேய்ந்த குரலுமாக பேசும் ராஜேஸ்வரி, தனது 18 சவரன் தாலிச் சங்கிலியை பறி கொடுத்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீளவில்லை. திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுவிட்டு தனது கணவருடன் பைக்கில் நேற்றிரவு வீடு திரும்பி கொண்டிருந்தபோது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வால்டாக்ஸ் சாலையில் இந்த சம்பவம் நடந்தது. பைக்கில் வேகமாக வந்த 2 பேர், ராஜேஸ்வரி கழுத்தில் இருந்த தங்கத் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்றனர். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை கொண்டு பூக்கடை காவல்துறையினர் விசாரணை நடத்திவருகிறார்கள்.
இதேபோல,ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த மஞ்சுளா என்ற பெண்மணி, ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலையில் நடந்து செல்லும்போது பைக்கில் வந்த இருவரிடம் தனது 4 சவரன் நகையை பறிகொடுத்தார். ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தனது கணவருடன் நேற்றிரவு தங்கசாலை, பழைய சிறைச்சாலை சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது பைக்கில் வந்த 3 பேர் அவரின் கழுத்தில் இருந்த 4 சவரன் தாலிச்சங்கிலியை பறித்துச்சென்றனர். அதேபோல, அடையாறில் சாலையில் நடந்து சென்ற கீதா என்பவரின் 6 சவரன் தங்கச்சங்கிலியை பைக்கில் வேகமாக வந்த இருவர் பறித்துச் சென்றனர். அம்பத்தூர் சிப்பட் சாலையில், சரஸ்வதி என்ற மூதாட்டியின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க நகையை பைக்கில் வந்த இருவர் பறித்துச்சென்றனர். இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். பெரும்பாலும் துணையுடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோதும், அச்சமின்றி வந்து பெண்களிடம் நகைகள் பறிக்கப்பட்டுள்ள சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
Loading More post
காஷ்மீரில் டிக்டாக் பெண் பிரபலம் சுட்டுக் கொலை - தீவிரவாதிகள் வெறிச் செயல்
கருணாநிதி பிறந்த நாளில் 'விக்ரம்' ரிலீஸ் ஏன்? - கமல்ஹாசன் பதில்
இதயங்களை வென்ற ரஜத் படிதார் - லக்னோவை வீழ்த்தி அசத்திய பெங்களூரு
ஜி ஸ்கொயர் தொடர்ந்த வழக்கு: எப்ஐஆரில் இருந்து சிலரது பெயரை நீக்க நடவடிக்கை
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!