Published : 20,Apr 2020 12:43 PM
தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 46 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. சில தினங்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்றே குறைந்து வந்த நிலையில், நேற்று 105 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதனால், சற்றே அச்சம் கூடியது.
இந்நிலையில், தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,520 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 46 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
#BREAKING சுகாதாரத்துறை அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு https://t.co/MAb94hwPjk
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 20, 2020