Published : 20,Apr 2020 09:35 AM

காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்த 2 பெண்களுக்கு கொரோனா

Corona-for-2-women-who-have-been-on-a-spiritual-tour-to-Kasi

தமிழகத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை 1477 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 15 பேர் உயிரிழந்துள்ளனர். 411 பேர் கொரோனாவில் இருந்து சிகிச்சைப்பெற்று குணமடைந்துள்ளனர்.

அண்ணாநகரில் ஒரே நாளில் 5 பேருக்கு ...

அதிகபட்சமாக சென்னையில் 285 பேரும், கோவையில் 133 பேரும், திருப்பூரில் 108 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையேஎ இந்தியாவில் கொரோனா தொற்று உறுதியானவர்களில் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்திருந்தது.

இன்றிலிருந்து கொரோனாவால் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை அந்தந்த மாநிலங்களின் அரசே தீர்மானித்துக்கொள்ளலாம் என பிரதமர் தெரிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் இருந்து காசிக்கு ஆன்மிக சுற்றுலா சென்று வந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்