மேட்டூர் அணையின் நீர்மட்டம் 250 நாள்களைக் கடந்தும் 100 அடிக்கு மேல் நீடிப்பதால், டெல்டா பாசனத்துக்கு ஜூன் 12- ஆம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீராதாரம் மேட்டூர் அணை. அந்த அணையிலிருந்து ஆண்டுதோறும் சம்பா நெல் பாசனத்துக்காக ஜூன் 12-ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும். கடந்த ஆண்டுகளில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் உரிய தேதியில் அணையைத் திறக்க முடியவில்லை. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13- ஆம் தேதி அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது. தற்போது மேட்டூர் அணையில் 100.92 அடி நீர்மட்டம் உள்ளது. கடந்த 250 நாள்களாக அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேல் நீடிக்கிறது.
கடந்த 2005-ஆம் ஆண்டு அதிகபட்சமாக மேட்டூர் அணையில் 427 நாள்களாக 100 அடிக்கும் அதிகமாக நீர் இருந்தது. அதன் பிறகு 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டுதான் அணையில் இந்த நிலை காணப்படுகிறது. இதனால் ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா சாகுபடிக்கு தண்ணீரைத் திறக்க வாய்ப்பு உள்ளது. பருவமழை தொடங்கிய பின், அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 குழுக்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை... தமிழகத்தில் ஊரடங்கு தளர்வு இருக்குமா?
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!