Published : 20,Apr 2020 01:52 AM

டெல்லி: கொரோனா போராட்டம் - ரூ.1 கோடி நிவாரணத்தில் மேலும் சில துறைகள் சேர்ப்பு

Delhi-govt-expands-reach-of-Rs-1-cr-compensation

உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா, இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், காவலர்கள் என பல துறைகளைச் சேர்ந்தவர்களும் இரவு பகல் பாராமல் கொரோனாவை விரட்டுவதற்காக போராடி வருகின்றனர்.

image

இந்தப் போராட்டத்தில் அவர்களும் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவும் நேர்கிறது. இந்நிலையில் கொரோனாவுக்கு எதிராக தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், செவியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1கோடி வழங்கப்படும் என டெல்லி அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த திட்டத்தில் இன்னும் சில துறையினரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், முன்னதாக கொரோனாவுக்கு எதிராக தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.1கோடி வழங்கப்படும் என அறிவித்திருந்தோம். அது தற்போது இன்னும் சில துறைகளுக்கும் நீட்டிக்கப்படுகிறது.

image

பாதுகாப்பு பணியாளர்கள், காவலர்கள்,ஆசிரியர்கள், தீயணைப்பு வீரர்கள் என அனைவருக்கும் பொருந்தும். கொரோனாவுக்கு எதிரான பணியில் ஈடுபட்டு, கொரோனா நோயாளிகளிடம் இருந்து தொற்று பரவி உயிரிழக்க நேரிடும் பணியாளர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும் என தெரிவித்துள்ளார்.

மே 7 வரை ஊரடங்கு.. உணவு டெலிவரிக்கு தடை.. : தெலங்கானா முதல்வர் அதிரடி

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்