ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட தந்தை

ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட தந்தை
ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட தந்தை

சாத்தூர் அருகே தந்தையே தனது ஒரு வயது குழந்தைக்கு விஷம் கொடுத்து தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாத்தூர் அருகிலுள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பது மகன் மாரிக்கண்ணன் (29). இவர் தனியார் கார், வேன்களுக்கு டிரைவராக பணியாற்றி வருகிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு தன்னுடைய அத்தை மகள் சங்கரேஸ்வரி (23) என்பவரை மாரிக்கண்ணன் மணமுடித்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு மவுனி கனேஷ் (1) என்ற ஆண் குழந்தை உள்ளது .

 இந்நிலையில், திருமணமான நாள் முதலே மாரிக்கண்ணனுக்கும் சங்கரேஸ்வரிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது
144 தடை உத்தரவின் காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் குடும்பத்தகராறு அதிகமானதாகவும் சொல்லப்படுகிறது. வாக்குவாதம் முற்றியதால் விரக்தி அடைந்த மாரிக்கண்ணன் தனது குழந்தைக்கு விஷம் கொடுத்து, தானும் அதே விஷத்தை அருந்தி தற்கொலை செய்துள்ளார்.

இதனையடுத்து தகவல் கேள்விப்பட்டு வந்த உறவினர்கள் உடனடியாக ஒரு வாகனத்தை அமர்த்தி சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு இருவரையும் அழைத்து சென்றனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர்.சம்பவம் குறித்து தகவலறிந்த இருக்கன்குடி காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com