[X] Close

ஓவியம் மூலம் பாலியல் கொடுமையை நிரூபித்த 10 வயது சிறுமி

Delhi-child-rape-case

 

உறவினரால் தன் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்கொடுமையை ஓவியம் வரைந்து காட்டி, நீதிமன்றத்தில் நிரூபித்துள்ளார், 10 வயது சிறுமி.

கொல்கத்தாவைச் சேர்ந்த சிறுமி தனது தாயின் மரணத்திற்கு பிறகு டெல்லியில் உள்ள உறவினரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சிறுமிக்கு 8 வயதாக இருக்கும்போது அங்குள்ள நெருங்கிய உறவினர் ஒருவர் அச்சிறுமியை பலமுறை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். இந்த விஷயம் வெளியே தெரிந்தவுடன் அந்த நபர் தலைமறைவாகிவிட்டார். ஆனால் டெல்லியில் இதுகுறித்து புகார் பதிவு செய்யப்பட்டது.


Advertisement

டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின்போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை நிரூபிப்பது கடினமாக இருந்தது. சிறுமி சொல்லும் பதில்களும், அங்க அடையாளங்களும் குழப்பத்தை ஏற்படுத்தின. எனவே நடந்த சம்பவத்தை படம் வரையுமாறு நீதிமன்றம் சிறுமியிடம் கேட்டுக் கொண்டது. எனவே இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவத்தை சிறுமி படமாக வரைந்தார். அந்த ஓவியத்தில் கையில் பலூனுடன் ஆடையில்லாமல் நிற்கும் தன்னுடைய படத்தையும், கழட்டிய ஆடையைத் தனியாகவும், தன்னைச் சுற்றியிருந்த வீட்டின் படத்தையும் வரைந்தார்.

இந்த ஓவியத்தின் மூலம் சம்பவம் நடந்த இடம், சிறுமியின் உறவினர் வீடுதான் என்பதையும், அந்த வீட்டுக்குள் சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்ததையும் நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. எனவே இந்த குற்றத்தில் ஈடுபட்ட அந்த நபருக்கு ரூ.10,000 அபராதமும், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. மேலும் சிறுமியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவருக்கு ரூ.3 லட்சம் நிலுவைத் தொகை கொடுக்க வேண்டும் என்றும் அறிவித்தது.


Advertisement

Advertisement
[X] Close