Published : 14,Jun 2017 10:25 AM
’வேலைக்காரன்’ டப்பிங்கை தொடங்கினார் சிவகார்த்திகேயன்

சிவகர்த்திகேயனை வைத்து மோகன் ராஜா இயக்கி வரும் படம் வேலைக்காரன். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் 5 ஆம் தேதி வெளியிடப்பட்டது. நயன்தாரா இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக மோகன் ராஜாவுடன் இணைந்துள்ளார். மலையாள நடிகரான ஃபஹத் ஃபாசில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இன்று காலை ‘வேலைக்காரன்’ படத்திற்கான டப்பிங் பணியை சிறப்பு பூஜையோடு துவங்கியுள்ளார் சிவகார்த்திகேயன்.