[X] Close

சாலையில் வீசப்பட்ட அழுகிய வாழைப்பழங்களை உண்ணும் கூலித் தொழிலாளர்கள்: டெல்லியில் அவலம்

இந்தியா,கொரோனா வைரஸ்

Gulid-eating-rotten-bananas-thrown-on-the-road-Workers---Suffering-in-Delhi

 

டெல்லியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் பிற மாநில கூலித் தொழிலாளர்கள் சாலையோரம் தூக்கி வீசப்பட்ட அழுகிய வாழைப்பழங்களை உண்ணும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

image


Advertisement

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஊரடங்கால் நோய் பரவல் தடுக்கப்பட்டாலும், பெரும்பான்மையான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக அன்றாடம் வேலைக்கு சென்று பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த மக்கள் இன்று உணவுக்கே வழியில்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு காவல்துறையினரும், தன்னார்வலர்களும் இணைந்து உணவுப் பொட்டலங்களையும் வழங்கி வருகின்றனர். இதற்கிடையே ஆதரவற்றோர் சிலர் உணவின்றி தவிப்பது, சாலையில் கொட்டிய பாலை ஒருவர் தன்னுடைய கைகளால் சேகரிப்பது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி விமர்சனத்திற்கு உள்ளானது.

 


Advertisement

‘மக்களுக்கு உதவ போலீஸ் அனுமதி தேவையில்லை.. தகவல் கொடுத்தால் போதும்’: உயர்நீதிமன்றம்

image

யூடியூப் பார்த்து ஏடிஎம்-ல் கொள்ளை முயற்சி : சிசிடிவியால் சிக்கிய இளைஞர்

இந்நிலையில், அதே போன்று ஒரு அவலம் நிகாம்போத் பகுதியில் நடந்துள்ளது. நிகாம்போத் காட் பகுதியில் ஒரு நீர் நிலையோரம் இடுகாட்டின் அருகே அழுகிய வாழைப்பழங்கள் கொட்டிக்கிடக்கின்றன. அந்த அழுகிய பழங்களில் ஓரளவு நன்றாக இருக்கக்கூடியவற்றை சேகரித்து கூலித் தொழிலாளர்கள் சிலர் உட்கொண்டு வருகின்றனர். நாள்கூலிக்கு வேலை பார்க்கும் தங்களுக்கு கடந்த மூன்று வாரங்களாக எவ்வித வேலையும் கிடைக்கவில்லை என்று வேதனையுடன் கூறினர். கையில் பணமில்லாததால் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தாங்கள் தள்ளப்பட்டு்ள்ளதாக அவர்கள் மனம் வெதும்பி கூறியுள்ளனர்.


Advertisement

Advertisement
[X] Close