Published : 16,Apr 2020 03:50 AM

நாகர்கோவிலில் கொரோனா பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்ட 2 பெண்கள் உயிரிழப்பு

2-women-death-who-admitted-hospital-for-corona-test-in-nagarcoil

நாகர்கோவிலில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக ரத்தம் மற்றும் சளி எடுக்கப்பட்ட நிலையில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அம்பலக் கடையை சேர்ந்தவர் ராஜம் (68). இவருக்கு கொரோனா அறிகுறி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இவர் நாகர்கோவில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும், கொரோனா இருக்கிறதா என கண்டறிய ரத்தம் மற்றும் சளி அவரிடம் இருந்து பரிசோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பரிசோதனை அறிக்கை இன்னும் வெளிவராத நிலையில் அவர் திடீரென உயிரிழந்தார்.

One lakh test at a time;The results in 30 minute Coronation test ...

கொரோனா கொடூரம் : எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் உயிரிழப்பு?

அதேபோல், புத்தேரியைச் சேர்ந்த பரமேஸ்வரி (53) என்பவர் நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவருக்கு பரிசோதனைக்கு மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இவரது பரிசோதனை அறிக்கையும் இன்னும் வெளிவரவில்லை.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்