திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 13 வயது சிறுமி உட்பட 7 பேருக்கு கொரானா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவள்ளூரில் கொரானா பாதிப்பு 40 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரானா தொற்று நேற்று சற்று குறைந்து 31-ஆக இருநத நிலையில், இன்று 38 பேருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் ஏற்கனவே 33 பேருக்கு கொரானா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், இன்று 7 பேருக்கு கொரானா உறுதியானது. திருவள்ளூரில் தனியார் மருத்துவ கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களில் 7 பேருக்கு கொரானா உறுதியானதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.
இதில் அரியன்வாயல், பொன்னேரி, பழவேற்காடு செம்பாசிப்பள்ளி குப்பம் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும், வடமதுரையில் ஒருவருக்கும் கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே போல, திருவள்ளூரில் ஒருவருக்கும், பேரம்பாக்கம், செங்குன்றம் தீர்த்தங்கரையம்பட்டு ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் தொற்று உறுதியானது.ஆவடியில் உள்ள தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய குடியிருப்பில் 13 வயது சிறுமிக்கு கொரானா உறுதி செய்யப்பட்டு இன்று ஒரே நாளில் 7 பேர் என மொத்த பாதிப்பு 40-ஆக அதிகரித்துள்ளது.
Loading More post
'மோதிக்கொண்ட கல்லூரி பேருந்து - தனியார் பேருந்து..'. பதைபதைக்கவைக்கும் சிசிடிவி காட்சிகள்
``என் மகள்களின் வருகைக்காக காத்திருக்கிறோம்”- மறுமணம் குறித்து டி.இமான் நெகிழ்ச்சி பதிவு
``திமுக பெரிய வெங்காயம் போன்றது; உரிக்க உரிக்க ஒன்றும் இருக்காது”- அண்ணாமலை பேச்சு
மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்
சென்னையில் நடந்த விபத்துகளில், ஹெல்மெட் அணியாததால் அதிக உயிரிழப்புகள் - முழு விவரம்
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்