Published : 14,Jun 2017 03:58 AM

பள்ளிப் பைகளில் அகிலேஷ் படம்: குஜராத் அரசு அதிர்ச்சி

Akhilesh-Yadavs-Hidden-Face-On-School-Bags-In-Gujarat-Baffles-Many

குஜராத் மாநிலத்தில் வழங்கப்பட்ட பள்ளிப்பைகளில் உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்வின் படம் அச்சடிக்கப்பட்டிருந்தது அம்மாநில ஆளும் பாஜக அரசுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் சோட்டா உதய்பூர் மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு 12,000 புத்தக்கப் பைகள் வழங்கப்பட்டன. அதில் பஞ்சாயத்து லோகோ தான் வெளியில் தெரியும் படி ஒட்டப்பட்டிருந்தது. ஆனால் மாணவர்கள் அதனை பிய்த்து எடுத்து பார்க்கும் போது எல்லாருக்மே பேரதிர்ச்சி. உள்ளே உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவின் படம் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் பைகளை சூரத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது. இந்தப் பைகளின் படங்கள் சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து இது குறித்து விசாரிக்க குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்