Published : 14,Jun 2017 03:44 AM

"ஒண்ணு சேரும் வழிய பாருங்க..." - மோடி அட்வைஸ்

Modi-advices-OPS-regarding-ADMK-issue

அதிமுகவின் இரு அணிகளும் இணைய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஓபிஎஸ், இரு அணிகளும் இணைந்தால் தான் நிலையான ஆட்சியைத் வழங்கமுடியும் என பிரதமர் மோடி தம்மிடம் கூறியதாக தெரிவித்திருக்கிறார். மேலும், தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்றும் ஊழலை தாம் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை எனவும் பிரதமர் தெரிவித்ததாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு ஓபிஎஸ், சசிகலா தலைமையில் அதிமுக இரு அணிகளாக பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்குச் சென்றபின், பழனிசாமி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் இரு பிரிவுகளாக செயல்பட்டன. பின், இவ்விரு அணிகளும் இணையும் முயற்சியில் இரு அணிகளின் தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்பட்டது. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன் பேச்சுவார்த்தைக்காக அமைத்த குழுவை கலைப்பதாக ஒபிஎஸ் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்