[X] Close

ஊரடங்கிற்கு முன்னும் பின்னும் - தமிழகத்தில் விர்ரென்று ஏறிய கொரோனா பாதிப்பு!

தமிழ்நாடு,கொரோனா வைரஸ்

Tamilnadu-corona-live-updates-toll-up-to-1173

ஊரடங்கிற்கு முன் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக இருந்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. ஏப்ரல் 1ஆம் தேதி ஒரே நாளில் அதிகபட்சமாக 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.


Advertisement

image

ஏப்ரல் 2-ஆம் தேதி 75 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், ஏப்ரல் 3-ஆம் தேதி 102 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 4-ஆம் தேதி 74 பேரும், ஏப்ரல் 5-ஆம் தேதி 86 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக குறைந்தது. இதேபோல், ஏப்ரல் 7ஆம் தேதி 69 பேரும், ஏப்ரல் 8ஆம் 48 பேரும், 9ஆம் தேதி 96 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.


Advertisement

ஏப்ரல் 10ஆம் தேதி 77 பேருக்கும், 11ஆம் தேதி 58, 12-ஆம் தேதி 106 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 13 ஆம் தேதி 98 பேருக்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

image

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை ஊரடங்கிற்கு முன் 1 8ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. மார்ச் 31ஆம் தேதி தமிழகத்தில் 124 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த எண்ணிக்கை தற்போது 1173 ஆக அதிகரித்துள்ளது.


Advertisement

ஊரடங்கு நீட்டிப்பு: டாஸ்மாக் கடைகளின் நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட வாணிபக் கழகம்


Advertisement

Advertisement
[X] Close