Published : 13,Apr 2020 12:47 PM
தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா - பாதிப்பு 1173ஆக உயர்வு

தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1075ல் இருந்து 1173 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று வரை மொத்தமாக 10 ஆயிரத்து 655 மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஆயிரத்து 75 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்று மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1173 ஆக அதிகரித்துள்ளது.
#LIVE தமிழகத்தில் மேலும் 98 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி https://t.co/DZrYSP9lXy
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 13, 2020
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 905 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 51 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9352 ஆக உயர்ந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324 ஆக அதிகரித்துள்ளது.