[X] Close

1000 பேர் கொல்லப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை...! - 101’ஆம் ஆண்டு நினைவு தினம்...!

இந்தியா,சிறப்புச் செய்திகள்

Jallianwala-Bagh---101-years---

இந்திய விடுதலைப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக என்றும் நாம் நினைவு கூறத்தக்கது ஜாலியன் வாலாபாக் படுகொலை. இன்றோடு அத்துயர சம்பவம் நிகழ்ந்து 101 ஆண்டுகளாகிறது. இந்திய விடுதலை யுத்தத்தில் அகிம்சை போராளிகள் பிரிடீஷ் ஆட்சிக்கு கொடுத்த நெருக்கடிகள் முக்கியமானது. அகிம்சை வழியில் போராடிய விடுதலை வீரர்கள் மக்களிடம் ஏற்படுத்திய தாக்கமும் அதன் எதிர்வினைகள் பிரிட்டீஷ் அரசுக்கு கொடுத்த நெருக்கடியும் இந்திய விடுதலைப் போரின் முக்கிய அங்கமாகும்.


Advertisement

image

1919 மார்ச் மாதம் பிரிட்டீஷ் இந்திய பாதுகாப்பு சட்டமாக ரெளலட் சட்டம் இயற்றப்பட்டது. அச்சட்டம் இயற்றப்பட்ட குழுவின் தலைவராக சிட்னி ரெளலட் இருந்தார். இச்சட்டம் மக்களின் பேச்சுரிமை, எழுத்துரிமை என அனைத்து உரிமைகளையும் பறித்தது. தேச பாதுகாப்பு எனக் கூறி ரெளலட் சட்டத்தின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால் அவரை எந்த விசாரணையும் இன்றி இரண்டு ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கலாம். வக்கீல் வைத்து வாதாட முடியாது. ஜாமீன் கிடைக்காது. ஆங்கிலேயர் இயற்றிய சட்டங்களில் மிகவும் மோசமான சட்டமாக இது இருந்தது. இச்சட்டத்தின் கீழ் சத்யபால் மற்றும் சாய்புதின் ஆகிய தலைவர்களை கைது செய்தது ஆங்கிலேய அரசு.


Advertisement

இச்சட்டத்தை எதிர்த்து 1919 ஏப்ரல் 13’ஆம் தேதி மாலை 4:30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் இருந்த ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் பெரும் திரளான மக்கள் கூடினர். சுமார் 7 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்த மைதானத்தில் மக்கள் கூடி ஆங்கிலேய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது தனது 150 துருப்புகளுடன் வந்து சேர்ந்தார் ஆங்கிலேய அதிகாரி மைக்கேல் ஓ டயர். அந்த மைதானத்துக்கு ஒரே ஒரு நுழைவாயில் தான் இருந்தது. அந்த நுழைவாயிலின் இரும்புக் கதவுகள் அடைக்கப்பட்டன. பின் எந்த முன் அறிவிப்பும் இன்றி டையர் கட்டளையிடவே 150 துருப்புகளும் பொதுமக்களை நோக்கி சுட்டனர். சுமார் 1600 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடந்ததாக தெரிவிக்கின்றன தகவல்கள். கண் இமைக்கும் நேரத்தில் நடந்தேறிய அந்த கொடூரத்தில் சுமார் 1000 பேர் இறந்ததாக காங்கிரஸ் கூறியது. ஆனால் பிரிட்டீஷ் அதிகாரிகள் தாக்கல் செய்த விசாரணை அறிக்கையில் 379 பேர் மட்டுமே சுடப்பட்டதாக கூறப்பட்டது.

image

ஹண்டர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணையின் போது கூட இது குறித்து “நான் அறிந்தே இதை செய்தேன். துருப்புகளோடு சேர்ந்து நானும் என் கை துப்பாக்கியால் சுட்டேன். பிரிட்டீஷ் அரசு என்றால் இந்தியர்கள் நடுங்கி நிற்க வேண்டும் என்பதற்காகவே இதனை செய்தேன். இது குறித்து எனக்கு எந்த வருத்தமும் இல்லை.” என எந்த குற்ற உணர்ச்சியும் இன்றி பதில் சொன்னார் மைக்கேல் ஓ டையர். ஆங்கிலேய அரசு கண்துடைப்பு நடவடிக்கையாக மைக்கேல் ஓ டையரை இங்கிலாந்துக்கு அனுப்பியது. மைக்கேல் ஓ டையர் தப்பித்தார்.


Advertisement

ஆனால், காலம் அதற்கான பதிலடியை 21 ஆண்டுகள் கழித்து கொடுத்தது. 1940 மார்ச் 13-ம் தேதி, லண்டனில் உள்ள கேக்ஸ்டான் ஹாலில் கிழக்கிந்திய கம்பெனியின் நிகழ்வொன்று நடைபெற்றது. அங்கு மைக்கல் ஓ டையர் வந்தார். மேடையேறிய மைக்கேல் ஓ டையரின் உடலை இரண்டு துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. 21 ஆண்டுகள் காத்திருந்து திட்டம் தீட்டி இங்கிலாந்து வரை சென்று மைக்கேல் ஓ டையரை சுட்டவர் உத்தம் சிங். இவரும் ஜாலியான் வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்ட மைதானத்தில் இருந்தவர். உத்தம் சிங்கிற்கு இங்கிலாந்து அரசு மரண தண்டனை வழங்கியது. பிறகு இந்திய விடுதலைக்கு பிறகு இந்திராகாந்தி தலைமையிலான ஆட்சியில் உத்தம் சிங்கின் உடல் இங்கிலாந்தில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்டு தக்க மரியாதையுடன் மறு அடக்கம் செய்யப்பட்டது.

image

20’ ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய அரசால் நிகழ்த்தப்பட்ட அந்த மாபெரும் படுகொலைக்கு நூறு ஆண்டுகளாக இங்கிலாந்து அரசு எந்த மன்னிப்பும் கோரவில்லை. பிறகு கடந்த ஆண்டு ஏப்ரல் 7ஆம் தேதி அதாவது ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்து நூறு ஆண்டுகள் நெருங்கிய போது இங்கிலாந்து பிரதமர் தெரிசா மே, இங்கிலாந்து அரசின் சார்பாக வருத்தம் தெரிவித்தார். ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்த்தப்பட்ட இந்த தினத்தில் அங்கு கூடியிருந்த தியாகிகளை நினைவு கூர்வோம்.

Related Tags : Jallianwala Baghindiafreedom fight19191947

Advertisement

Advertisement
[X] Close