
இந்திய தயாரிப்பான ரேபிட் கிட்களை தமிழக அரசு ஏன் வாங்கவில்லை என தருமபுரி எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இருப்பினும்,
கொரோனாவை அறிவதற்கான சோதனைகள் விரைவாக செய்யப்பட்டவில்லை என்று நிபுணர்கள் பலரும் கூறி வந்தனர்.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலர் சண்முகம், “தமிழகத்திற்கு வரவேண்டிய ரேபிட் கிட் அமெரிக்காவுக்கு திருப்பிவிடப்பட்டன. அதனால், அடுத்ததாக தமிழகத்திற்கு உபகரணங்கள் வந்துவிடும்” என்று தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய தயாரிப்பான ரேபிட் கிட்களை தமிழக அரசு ஏன் வாங்கவில்லை என தருமபுரி எம்பி செந்தில்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், ''சீனாவில் இருந்து விரைவு சோதனை கிட் வரவில்லை. இந்தியாவில் ICMR அங்கீகாரம் பெற்ற புனே சார்ந்த லேப் Rapid test kit லட்சக்கணக்கில் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது. கேரளா அதை பயன்படுத்தி 2 மணி நேரத்தில் ரிசல்ட் கொடுக்கும் சூழ்நிலையில், தமிழக அரசு ஏன் இதை ஆர்டர் செய்யவில்லை'' என கேள்வி எழுப்பியுள்ளார்.