[X] Close

தமிழக அதிகாரிகள் மீது தாக்குதல்: பசு பாதுகாப்பு கும்பலுக்கு ஸ்டாலின் கண்டனம்

MK-Stalin-condemns-attack-on-Tamil-Nadu-animal-husbandry-officials

செட்டிநாட்டில் உள்ள பால் பண்ணைக்கு மாடுகள் வாங்க ராஜஸ்தான் சென்ற தமிழக அதிகாரிகள் மீது "பசு பாதுகாவலர்கள்" என்ற பெயரில் தாக்குதல் நடத்தி உள்ள வன்முறை கும்பலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதல் நடத்திய அந்த கும்பலை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.


Advertisement

முன்னதாக, ராஜஸ்தான் மாநிலத்தில் தமிழக அரசின் கால்நடைப் பாதுகாப்பு துறை சார்பாக பசுக்களை ஏற்றி வந்த 5 லாரிகள் மீது 50 பேர் கொண்ட பசுப் பாதுகாப்பு கும்பல் கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் மண்டை உடைந்தது.

தமிழக அரசின் கால்நடைப் பாதுகாப்பு துறை சார்பாக ராஜஸ்தானில் இருந்து தமிழ்நாட்டுக்கு பசு மாடுகளை ஏற்றிக் கொண்டு வந்த 5 லாரிகள் மீது 50 பேர் கொண்ட பசுப் பாதுகாப்பு கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பார்மர் மாவட்டத்தில் நடந்த இந்தத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநரின் மண்டை உடைந்தது. தமிழக அரசின் சார்பாக வந்த இந்த வாகனங்களில் மாடுகளை ஏற்றிச் செல்வதற்கான ராஜஸ்தான் மாநில காவல்துறையினரின் அனுமதிக் கடிதம் மாடுகளை ஏற்றுச் செல்வதற்கு ஆட்சேபனை இல்லை என்பதற்கான அதிகாரிகளின் அனுமதி மற்றும் ஒப்புதல் கடிதம் அனைத்தும் இருந்தன. ஆனால் எதையும் கண்டுகொள்ளாத அந்த கும்பல் லாரிகளின் கண்ணாடிகளை அடித்து உடைத்தது மட்டுமில்லாமல் வாகன ஓட்டுநர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளது. இதில் ஒரு ஓட்டுநரின் மண்டை உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close