Published : 17,Jan 2017 11:35 AM

அதிமுக டூ பாஜக: அழைப்பு விடுக்கும் எச்.ராஜா

BJP-H-Raja-call-to-admk-members

அதிமுகவின் உண்மையான விசுவாசிகளும் எம்ஜிஆர் தொண்டர்களும் பாஜகவுக்கு வர வேண்டும் என அக்கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

காரைக்குடியில் அவர் அளித்த பேட்டியில், அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களில் பா.ஜ.க எந்த விதத்திலும் தலையிட்டதில்லை என்றும் பா.ஜ.க குறித்து சசிகலா நடராஜன் மற்றும் திவாகரன் பேச்சு வன்மையாக கண்டிக்கதக்கது என்றும் கூறினார்.

அதிமுகவின் விசுவாசிகளும் எம்.ஜி.ஆரின் தொண்டர்களும் பாரதிய ஜனதா கட்சிக்கு வரவேண்டும் என்றும் கேட்டு கொண்ட எச்.ராஜா, நடராஜன் பேசுவது அதிமுகவை உடைக்கும் செயலாகவே உள்ளது என்றும் தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்