Published : 11,Apr 2020 01:01 PM
தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா உறுதி: பாதிப்பு 969 ஆக உயர்வு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நாள் தோறும் மாலை 6 மணியளவில் பாதிப்பு மற்றும் உயிரிழப்பு தொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல்களை சுகாதாரத்துறை செயலர் மற்றும் தலைமைச் செயலர் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று தலைமைச் செயலர் சண்முகம் மற்றும் சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
ஊரடங்கு குறித்து பிரதமர் அறிவிக்கும் முடிவை ஏற்று தமிழகம் பின்பற்றும்
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 11, 2020
- தலைமைச் செயலாளர்#CoronaVirus | #COVID2019india | #Lockdown | #StayHome | #StayAtHomepic.twitter.com/SQZS4OCP3U
செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், “தமிழகத்தில் ஊரடங்கை இரண்டு வாரங்கள் நீட்டிக்க முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடி உடனான ஆலோசனையின் போது வலியுறுத்தினார். ஊரடங்கை ஒரு மாநிலத்தில் மட்டும் கடைபிடித்தால் பலன் கிடைக்காது. அதனால், ஊரடங்கு தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு அறிவிக்கின்ற உத்தரவை தமிழகம் முழுமையாக கடைபிடிக்கும்” என்றார்.
மேலும், தமிழகத்தில் மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 969 ஆக அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக அவர் கூறினார்.
#LIVE தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர் சந்திப்பு https://t.co/SKZOhK2cKO
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 11, 2020