வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் புழல் சிறையில் அடைப்பு

வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் புழல் சிறையில் அடைப்பு
வங்கதேசத்தை சேர்ந்த 3 பேர் புழல் சிறையில் அடைப்பு

மத பிரசாரத்தில் ஈடுபட்டு கைதான வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

டெல்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்றுவிட்டு சென்னை பெரியமேடு பகுதியில் தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 3 பேர் மீது பெரியமேடு போலீசார் கடந்த 7-ம்தேதி வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுடைய மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவர்களுக்கு கொரானா தொற்று இல்லை என உறுதியானது. இந்நிலையில் அவர்கள் 3 பேரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com