Published : 13,Jun 2017 08:51 AM

சரவணன் எம்எல்ஏவிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ்

OPS-speaks-about-MLA-Saravanan-s-bribe-video

 

பேரம் தொடர்பாக வெளியான வீடியோ குறித்து எம்எல்ஏ சரவணனிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்தார்.

நேற்று ஆங்கில தொலைக்காட்சி ஒன்றில், மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன் பேசுவது போன்ற ரகசியமாக பதிவு செய்யப்பட்டது என்று கூறி வீடியோ ஒன்று வெளியானது. அதில், சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏ-க்கள் சசிகலா அணிக்கு ஆதரவாக வாக்களிக்க தலா ரூ.6 கோடி வரை லஞ்ச பேரம் பேசப்பட்டது என அதிரடி குற்றச்சாட்டை அவர் கூறியிருந்தார். ஆனால் இந்த ரகசிய வீடியோ குறித்து நேற்றே பதிலளித்த சரவணன், கூவத்தூரில் எனக்கு பணம் தருவதாக யாரும் சொல்லவில்லை. நானும் யாரிடமும் பணம் வாங்கவில்லை என தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய ஓபிஎஸ், லஞ்ச பேரம் தொடர்பாக எம்எல்ஏ சரவணனிடம் உரிய விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். எம்எல்ஏ சரவணன் தற்போது ஓ.பன்னீர்செல்வம் அணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்