Published : 13,Jun 2017 08:28 AM

உண்மையானது பிரபாஸ்-அனுஷ்கா வதந்தி

Prabhas-and-Anushka-team-up-again

 

’சாஹோ’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக, அனுஷ்கா நடிப்பது உறுதியாகியுள்ளது.

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், ‘சாஹோ’. சுஜித் இயக்கும் இந்தப் படத்தில் அவர் ஜோடியாக நடிக்க, இந்தி நடிகைகளிடம் பேசி வந்தனர். இந்நிலையில் அனுஷ்காவே, பிரபாஸூடன் மீண்டும் நடிப்பார் என்று வதந்தி வெளியானது. ஏற்கனவே இவர்கள் பில்லா, மிர்ச்சி, பாகுபலி ஆகிய படங்களில் இணைந்து நடித்துள்ளனர். பொருத்தமான ஜோடி எனக் கூறப்பட்டு வந்த இவர்கள், ’சாஹோ’வில் மீண்டும் இணைவது இப்போது உறுதியாகி உள்ளது. 

‘ஸ்கிரீனில் இவர்களது கெமிஸ்ட்ரி அழகாக இருக்கும் என்பதால் மீண்டும் அவர்களை ஜோடியாக்கியுள்ளோம்’ என்று படக்குழு கூறியுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் பிரபாஸ் அடுத்த மாதத்தில் இருந்து கலந்துகொள்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்