ஃபேஸ்புக்கில் கொரோனா வைரஸ் குறித்து அவதூறு செய்தி பதிவிட்டதாக ஒருவர் கைது

ஃபேஸ்புக்கில் கொரோனா வைரஸ் குறித்து அவதூறு செய்தி பதிவிட்டதாக ஒருவர் கைது
ஃபேஸ்புக்கில் கொரோனா வைரஸ் குறித்து அவதூறு செய்தி பதிவிட்டதாக ஒருவர் கைது

ராணிப்பேட்டை அருகே ஃபேஸ்புக்கில் கொரோனா வைரஸ் குறித்து அவதூறு செய்தி பதிவிட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் எந்த அளவுக்கு ஒரு தகவலை பகிர்ந்து கொள்ள உதவியாக இருக்கிறதோ அதே அளவுக்கு வதந்திகளை நம்புவதற்கும் வழிவகுக்கிறது. வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் வதந்தியால் தாக்குதலுக்கு உள்ளாகி அப்பாவிகள் பரிதாபமாக உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது.

இதனைத்தொடர்ந்து வாட்ஸ்அப்பில் ஃபார்வேர்டு செய்யும் வசதியை அந்த நிறுவனம் குறைத்தது. ஒரு செய்தியை 5 பேருக்கு மேல் ஒரே நேரத்தில் பகிர முடியாது என ஏற்கெனவே கட்டுப்பாடு விதித்திருந்தது. ஆனால் நேற்று ஒருவருக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்தி அனுப்ப முடியும் என்ற புதிய கட்டுப்பாட்டை விதித்தது. கொரோனா குறித்து வதந்தி பரப்பாமல் இருக்கவே இந்த கட்டுப்பாடு என அந்நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில், ராணிப்பேட்டை அருகே வாட்ஸ்அப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கொரோனா வைரஸ் சம்பந்தமாக உண்மைக்கு புறம்பாகவும் மத நல்லிணக்கத்திற்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் பதிவுகளை ஒருவர் பதிவிட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எனவே போலீசார் ஆய்வு செய்து நெமிலி அடுத்த நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன்(30) என்பவரை கைது செய்தனர்.

குமரேசன் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மயில்வாகனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com