Published : 06,Apr 2020 01:36 PM

‘கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்தனர்’

5-persons-include-10-month-old-baby-recovered-from-covid-19-in-kovai-esi-hospital

கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 5 பேர் குணமடைந்தனர்.

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 63 பேர் சிகிச்சையில் இருந்தனர். இந்நிலையில், இவர்களில் 5 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் கோவையில் முதலாக அனுமதிக்கப்பட்ட 25 வயது மாணவி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்.

      image

அத்துடன், பெண் மருத்துவர், அவரது 10 மாத குழந்தை, பெண் மருத்துவரின் தாய், பணிப்பெண் ஆகிய 4 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 5 பேரும் இன்று ஆம்புலன்ஸ் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் இராசமணி தெரிவித்துள்ளார்.

5 பேர் வீடு திரும்பியதால், மீதமுள்ள 58 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 முன்னதாக, தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் தெரிவித்து இருந்தார். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571இல் இருந்து 621 ஆக உயர்ந்துள்ளது.


கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் சேவகன் - சென்னையில் ஒருவர்..! 


 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்