டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று இல்லாத ஆண் குழந்தை பிறந்துள்ளது.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்பட்ட நிலையில், அவரது கர்ப்பிணி
மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. டெல்லியில் கர்ப்பிணி ஒருவருக்கு கொரோனா பாதிக்கப்படுவது இதுவே முதல்முறை
என்பதால் அவர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் 9 மாத கர்ப்பிணி என்பதால், எந்த நேரமும் அவருக்கு பிரசவ வலி ஏற்படலாம் என கணிக்கப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் முன்னெச்சரிக்கையாக இருந்தனர். இந்நிலையில் கடந்த
வெள்ளிக்கிழமை அவருக்கு கொரோனா தொற்று இல்லாத ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள், தற்போது தாயும், சேயும் நலமாக இருக்கிறார்கள். இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு
கண்காணிப்பில் உள்ளனர். தாய்ப்பால் மூலம் கொரோனா பரவாது என்பதால் பாதுகாப்பு முறைகளுடன் தாய்ப்பால் கொடுத்து வருகிறார் என்று தெரிவித்துள்ளார்.
தம்பதி இருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் குழந்தை கொரோனா பாதிப்பு இல்லாமல் பிறந்தது அனைவரையும்
மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் தாயும் குணமடைந்து குழந்தையுடன் வீடு திரும்ப வேண்டுமென இணையத்தில் பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
உயிரியல் பூங்காவில் இருக்கும் புலிக்கு கொரோனா: அலர்ட் கொடுத்துள்ள அமெரிக்கா!
Loading More post
இப்படியும் சிலர்.. மரிக்காத மனிதநேயமும், மனிதமும்.. நெகிழ்ச்சியான ட்வீட்டின் பின்னணி இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய விரைவில் வருகிறது அவசர சட்டம்?
திருநெல்வேலி: ஆட்டோ கவிழ்ந்து எல்கேஜி மாணவன் உயிரிழப்பு; 5 குழந்தைகள் காயம்
அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து நீக்கப்படுகிறாரா ஓபிஎஸ்?
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai
நீதிமன்றத்தின் கதவை தட்டும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏகள்! லேட்டஸ்ட் டாப் 10 தகவல்கள்
’பஞ்சாங்கம்’ என்ற வார்த்தையை விட்டுவிடுங்க; நான் சொன்ன உண்மைய பாருங்க - மாதவன் விளக்கம்
திரையில் வீராங்கனைகளாக ஒளிரப்போகும் பாலிவுட் பிரபலங்கள் யார் யார்?
எல்ஐசி ஐபிஓ: ரூ.1.8 லட்சம் கோடி இழப்பு! இன்னும் சரியும்! முதலீட்டாளர்கள் வருத்தம்!