[X] Close

ஜெர்மனியிலும் ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

உலகம்,கொரோனா வைரஸ்

Worldwide--the-number-of-people-affected-by-coronation-exceeds-one-million-

அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஜெர்மனியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. 

image

இந்தியாவில் 4,000-ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு.. எங்கு அதிகம் தெரியுமா..?


Advertisement


அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து ஜெர்மனியிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.ஐரோப்பிய கண்டத்தில் பொருளாதாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் நாடுகளில் ஒன்றான ஜெர்மனியிலும் கொரோனா தன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அங்கு இறப்பு விகிதம்‌ குறைவாக இருப்பினும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

image

#TopNews ஒற்றுமை ஒளியை ஏற்றிய மக்கள் முதல் அதிகரித்த கொரோனா பாதிப்பு வரை..!

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 4 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 584 ஆக அதிகரித்துள்ளது. மேலும் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக ஜெர்மனியில் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டி விட்டது. 4 சக்கர வாகன உற்பத்தியில் முன்னோடியாக விளங்கி வரும் ஜெர்மனியில் கொரோனா ஏற்படுத்தியுள்ள இந்த தாக்கம், வரும் காலங்களில் அதிக வேலை இழப்புகளை ஏற்படுத்தும் என்ற அச்சத்தையும் உண்டாக்கியுள்ளது.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close