Published : 05,Apr 2020 08:25 AM

கொரோனா தொற்றை ஆரம்பத்திலேயே கண்டறிய ஆராய்ச்சி

Corona-Virus-medicine-research-in-Netherlands

கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஆய்வுகள் தொடரும் அதே நேரத்தில், அதனைமுன் கூட்டியே கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கழிவுநீரிலுள்ள நுண்ணுயிரிகளை பகுப்பாய்வு செய்து அதில் கலந்துள்ள வைரசின் தன்மையை அறியும் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. நெதர்லாந்து, அமெரிக்கா, சுவீடனில் நடைபெற்ற கழிவுநீர் பகுப்பாய்வில் வைரசின் தடயங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ஊரடங்கு உத்தரவால் மிளிர்ந்த யமுனை நதி..! 

image

கொரோனா வைரஸ் அறிகுறியுள்ளவர்கள் மட்டுமே தற்போது பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். அதனால், சிறுநீர், மலத்திலுள்ள நுண்ணுயிரிகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் லேசான அறிகுறி அல்லது அறிகுறியே இல்லாதவர்களை கூட கண்டறிந்து வைரஸ் பரவலை தடுக்க முடியும் என்பதே ஆராய்ச்சியாளர்களின் வாதம். மனித உடலிலிருந்து வெளியேறும் சிறுநீர், மலம் ஆகியவற்றில் கலந்துள்ள வைரஸில் ஆர்.என்.ஏக்களின் அளவை கண்டறிந்து, வைரஸ் தொற்றையும் உறுதி செய்யலாம் என்கிறார் நியுவெஜினில் உள்ள KWR நீரியியல் ஆய்வு மையத்தின் நுண்ணுயிரியாளர் கிரட்ஜான் மெடமா.

image

இவர்தான் சார்ஸ் நோயை பரப்பிய கொரோனா வைரஸின் மரபணுவை கண்டறிந்தவர். கழிவுநீரிலுள்ள நுண்ணுயிரிகளை ஆய்வு செய்வதன் மூலம் குறிப்பிட்ட பகுதியில் உள்ளவர்களில் தோராயமாக எவ்வளவு பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என்பதனையும் அறியலாம் என்கிறார் இவர். தொற்று ஏற்பட்ட 3ஆவது நாளிலேயே மனித உடலிலிருந்து வெளியேறும் கழிவுகளிலுள்ள நுண்ணுயிரிகள் மூலம் அதனை கண்டறியலாம். போலியோ ஒழிப்பை உறுதி செய்வதற்காக கழிவுநீர் கண்காணிப்பு பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாக அரிசோனா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் நுண்ணுயிரியலாளர் சார்லஸ் கெர்பா கூறுகிறார்.

கொரோனா கொடுமை: அடக்கம் செய்யப்படாமல் வீதிகளில் கைவிடப்படும் உடல்கள் 

தனிமனித இடைவெளி போன்றவை மூலம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும், மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக்கூறும் ஆய்வாளர்கள் கழிவுநீரிலுள்ள நுண்ணுயிரிகளை தொடர்ந்து ஆய்வு செய்வது நல்ல முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கும் எனக் கூறுகின்றார்கள்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்