பொன்னியின் செல்வனில் ஏன் நடிக்கவில்லை? - அமலா பால் பதில்

பொன்னியின் செல்வனில் ஏன் நடிக்கவில்லை? - அமலா பால் பதில்
பொன்னியின் செல்வனில் ஏன் நடிக்கவில்லை? - அமலா பால் பதில்
‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஏன் நடிக்கவில்லை என்பது குறித்து அமலா பால் விளக்கம் அளித்துள்ளார்.  
இயக்குநர் மணிரத்னம் மெகா பட்ஜெட்டில் ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் ஒரு பகுதியாக அமலா பால் இருப்பார் என்று முன்பு செய்தி வெளியானது. அதன் பின்னால்,  அமலா பால் இந்த வாய்ப்பை ஏற்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதற்காகக் காரணங்கள் விளக்கப்படவில்லை. 
இந்நிலையில், அமலா பால் இந்த வாய்ப்பை நிராகரித்ததற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார். எல்லோரும்  எல்லா வேடங்களையும் செய்ய முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.  மேலும் தனக்கு வழங்கப்படும் பாத்திரத்திற்கு தன்னால் நியாயம் செய்ய முடியுமா என்பது குறித்து தனக்குத் தெரியவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
மேற்கொண்டு அவர்,  “நான் சரியான பங்களிப்பை வழங்கத் தவறினால் தேவையற்ற விமர்சனங்களை ஏற்படுத்தும் . எனவே இந்த வாய்ப்பு வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஆனால் விரைவில் அல்லது இதற்குப் பின்னர் மணி ரத்னம் திரைப்படத்தில் என்னால் நடிக்க முடியும் என்று நம்புகிறேன்”என்று கூறியுள்ளார்.
எழுத்தாளர் கல்கி எழுதிய  ‘பொன்னியின் செல்வன்’ நாவலை முன்வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது. சோழ மன்னரான அருள்மொழிவர்வமனின் வரலாற்றை இந்த நாவல் கதையைச் சொல்கிறது. இதனைப் படமாக்கப் பலரும் பல காலங்களில் முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவை ஈடேறவில்லை. அந்தக் கனவு கதையை இப்போது மணிரத்னம் இயக்கி வருகிறார்.  இவருக்கு முன்னதாக, எம்.ஜி.ஆர் 1958 ஆம் ஆண்டில் ஐந்து தொகுதி நிறைந்த இந்தப் புத்தகத்தை ஒரு திரைப்படமாக உருவாக்க முயன்றார். பின்னர் அவர் அதைக் கைவிட்டார். மணி ரத்னமும் 2012 இல் இதை இயக்க முயன்றார். ஆனால் அதை இடையிலேயே நிறுத்தினார். 2015 ஆம் ஆண்டில், இக் கதையை அடிப்படையாகக் கொண்டு 32 மணி நேர அனிமேஷன் படம் ஒன்று தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com